2 வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் கர்நாடகாவில் வீடு புகுந்து இளைஞர் காங். தலைவர் படுகொலை

பெங்களூரு: தார்வார் மாவட்டம் ஹாஷ்மிநகரில் இளைஞர் காங்கிரஸ் மூத்த தலைவர் பைரோஸ் பதான் (32) வசித்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அவரது வீட்டிற்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பேசிய ஹூப்பள்ளி – தார்வார் மாநகர காவல் ஆணையர் என்.சசிகுமார், ‘வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பைரோஸ் பதானின் வீட்டிற்கு வந்த 3-4 பேர் அவரை தாக்கியிருக்கின்றனர். பைரோஸ் கான் வீட்டிற்குள் சென்று கதவை பூட்ட, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற அந்த கும்பல், பைரோஸ் பதானை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார் என்றார். 2 வாரத்தில் பைரோஸ் பதானுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: