நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல் சந்தித்து பேச்சு: வீடியோ வைரல்

புதுடெல்லி: இந்தியாவில் தற்போதைய மோதல் போக்கு நிறைந்த அரசியலில் அரிதான நிகழ்வாக, பிரதமர் மோடிக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும் இடையே நடந்த வெளிப்படையான சுமூகமான உரையாடல் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 200வது பிறந்தநாளையொட்டி நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அர்ஜூன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் அங்கு வந்திருந்தனர்.

அப்போது பிரதமர் மோடி, சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் உடல்நிலை குறித்து ராகுலிடம் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல்காந்தி அவரது உடல்நிலை தேறி வருவதாக பிரதமரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு, சோனியா காந்தி விரைவில் உடல்நலம் பெற பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி இடையே நடந்த இந்த வெளிப்படையான உரையாடல் குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Related Stories: