சோழிங்கநல்லூர், ஏப்.12: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் வரும் 16ம் தேதி வரை மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: ‘பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பிற்காக நடைபெறும் பராமரிப்பு பணிகளால், சிங்கபெருமாள்கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 9.35 மணி முதல் மதியம் 12.05 மணி வரையிலும் (2 மணி 30 நிமிடங்கள்), ஏப்ரல் 13 முதல் 16 வரை மதியம் 13.20 மணி முதல் 15.20 மணி வரையிலும் (2 மணிநேரம்) தடம் மற்றும் மின் தடை செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இன்று முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: காலை 9.40 மணியளவில் புறப்படும் தாம்பரம்-விழுப்புரம் மெமு பயணிகள் ரயில், காலை 9.30 மணியளவில் புறப்படும் காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை (40754) செமி பாஸ்ட் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இன்று பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: மதியம் 13.30 மணியளவில் புறப்படும் விழுப்புரம்-சென்னை கடற்கரை ரயில் (66046) விழுப்புரம் மற்றும் தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 5.35 மணியளவில் புறப்படும் சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில் (40751) வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.10 மற்றும் 9.30 மணியளவில் புறப்படும் ரயில்கள் (40615, 40619) சிங்கப்பெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையேயும், காலை 8.50 மற்றும் 10 மணியளவில் புறப்படும் ரயில்கள் (40617, 40621) காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து காலை 8.45, 9.40 மற்றும் 10.40 மணியளவில் புறப்படும் ரயில்கள் (40626, 40622, 40624) செங்கல்பட்டு சிங்கப்பெருமாள்கோவில் இடையேயும், காலை 11.35 மணியளவில் புறப்படும் ரயில் (40628) செங்கல்பட்டு – காட்டாங்கொளத்தூர் இடையேயும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாளை முதல் 16ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.40 மற்றும் மதியம் 12.40 மணியளவில் புறப்படும் ரயில்கள் (40531, 40535) சிங்கபெருமாள்கோவில்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மற்றும் 13.45 மணியளவில் புறப்படும் ரயில்கள் (40533, 40537) காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டிலிருந்து மதியம் 13.10 மற்றும் 14.20 மணியளவில் புறப்படும் ரயில்கள் (40538, 40542) செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து மதியம் 13.45 மற்றும் 15.05 மணியளவில் புறப்படும் ரயில்கள் (40540, 40544) செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
