திருக்கழுக்குன்றம், ஏப்.11: கல்பாக்கம் அடுத்த முகையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுராம் (45). முகையூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில் கல்பாக்கம் வந்து, மீண்டும் முகையூருக்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தார். வாயலூர் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ரகுராம், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டிணம் போலீசார், ரகுராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
