திருப்போரூர் தொகுதி வேட்பாளர்கள் விவரம்

திருப்போரூர், ஏப்.8: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பாமக, விசிக, தவெக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள், 31 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் 17 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது, மொத்தம் 14 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனு ஏற்கப்பட்ட வேட்பாளர்களின் விவரம் வருமாறு:

பன்னீர்தாஸ் – விசிக, பாலு – பாமக, விஜயராஜ் – தவெக, அம்பேத்ராஜன் – நாம் தமிழர், பொற்செழியன் – அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் (ராமதாஸ் பா.ம.க. கட்சி), தேசப்பன் – சமதா கட்சி, வினோத்குமார் – பகுஜன் சமாஜ், செல்வராஜ் – மண்ணின் மைந்தர்கள் கழகம், ஏழுமலை – சுயேட்சை,
பன்னீர்செல்வம் – சுயேட்சை, ஞானசேகரன் – சுயேட்சை, சந்திரன் – சுயேட்சை, மேஷாக் – சுயேட்சை, ஸ்ரீவத்ஸஸ்ரீ – சுயேட்சை.

இதில், ராமதாஸ் பாமக சார்பில் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த என்.எஸ்.ஏகாம்பரம் என்பவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த பொற்செழியன், அந்த கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வரை வேட்பு மனுவை திரும்ப பெற கெடு உள்ளதால், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

 

Related Stories: