தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஐ.ஜே.கே. வேட்பாளர் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் நேற்று கீழ்கட்டளை பகுதியில் வாக்கு சேகரித்தார். அதிமுக பகுதி செயலாளர் ஞா.சந்திரசேகர் ராஜா, மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பட்டாசுகள் வெடித்து மேளம் தாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய வேட்பாளர் கீழ்கட்டளை ஏரி பல்லாவரம் ஏரி திருநீர்மலை ஏரி உட்பட தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளிலும் கழிவுநீர் கலந்து ஆகாயத்தாமரை கோடிகள் படர்ந்து ஏரிகள் சீரழிந்து காணப்படுகிறது.
பல்லாவரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள பைப்புகள் பழுதாகி உடைந்து கழிநீர் வெளியேறி ஏரியில் கலந்து வருகிறது. சில இடங்களில் அதிகாரிகளே கழிவு நீரை ஏரியில் கலக்கும் வண்ணம் கால்வாய் அமைத்து உள்ளனர். இந்த தொகுதியில் ஏற்கனவே இருந்த சட்டமன்ற உறுப்பினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஏரி மாசடைந்து சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது தான் வெற்றி பெற்றவுடன் தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளிலும் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வாரி சீரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
அவர் வாக்கு சேகரிக்க சென்றபோது உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. தன்சிங், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பாஜக தொகுதி பொறுப்பாளர் பாலாஜி, அதிமுக பல்லாவரம் பகுதி கழக செயலாளர் ஜெயபிரகாஷ், குரோம்பேட்டை பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் சதீஷ், மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்
