தேர்தல் பயம், ஜூரம், ஜன்னியால் மோசமாக பேசுகிறார் எடப்பாடி: கனிமொழி எம்பி செம கலாய்

 

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசுவை ஆதரித்து நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்பி பேசியதாவது: எதிரணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய அரசோடு கரம் கோர்த்து, நம்மை பார்த்து குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து நாம் காப்பி அடித்துவிட்டோம் என்கிறார். நீங்கள் தேறுறதுக்கு வாய்ப்பே இல்லை. பெயிலாகப் போகிறீர்கள்.

அப்படிப்பட்ட உங்களைப் பார்த்து யாராவது காப்பியடிப்பாங்களா? எடப்பாடிக்கு முதலில் தேர்தல் பயம் வந்துச்சு. பிறகு தேர்தல் ஜூரம் வந்துச்சு. இப்போது ஜன்னி வந்துருக்கு. அதனால்தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாமல், ஒரு முதலமைச்சராக இருந்தவர் என்பதை மறந்துவிட்டு, மிக மோசமாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். என்னைப் பார்த்து, நீங்கள் மறுபடியும் ஜெயிலுக்கு போய்விடுவீர்கள் என்று சொல்கிறார். நான் எடப்பாடி பழனிசாமிக்கு ஒண்ணே ஒண்ணு சொல்ல விரும்புகிறேன்.

என் மீது போடப்பட்டது பொய் வழக்கு. அந்த வழக்கை எதிர்கொண்டு, என் மீது குற்றம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டு இங்கே நின்று கொண்டிருக்கிறேன். விடுதலை செய்யப்பட்டவள் நான். அவர் மேல் நிறைய வழக்குகள் இருக்கிறது. அதையும் அவர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன் நம்முடைய முதலமைச்சரை பற்றி மிகத் தரக்குறைவாக பேசினார். அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு தைரியம் இல்லாமல் தரக்குறைவாக விமர்சனங்களை செய்து கொண்டிருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு வரக்கூடிய தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: