தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி ஐ ஜே கே வேட்பாளர் வழக்கறிஞர் வி வெங்கடேசன் பல்லாவரம் பகுதியில் உள்ள பல்வேறு நலச் சங்கங்க நிர்வாகிகளை சந்தித்தார் அப்போது நலச்சங்கத்தினர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வேட்பாளர் வெங்கடேசனிடம் வழங்கினர் அதில் பாதாள சாக்கடை பிரச்சனை குடிநீர் பிரச்சினை குப்பைகளை சரியாக அல்லாதது ஏரிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்காதது போன்ற கோரிக்கைகளை தான் வெற்றி பெற்றவுடன் உடனடியாக சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.
நலச்சங்கத்தினர் எங்களின் முழு ஆதரவும் இரட்டை இலை சின்னத்திற்கு கிடைக்கும் என உறுதி அளித்தனர் வேட்பாளர் நல சங்கங்களை சந்தித்து ஆதரவு திரட்டிய போது உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. தன்சிங் பகுதி கழகச் செயலாளர் ஜெயபிரகாஷ், கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
