உத்தரகாண்ட் – டேராடூனில் பாகிஸ்தானின் ISI உளவு அமைப்புக்கு தொடர்புடைய ‘தெஹ்ரீக்-இ-தாலிபான் ஹிந்துஸ்தான்’ என்ற தீவிரவாதக் குழுவுக்கு உளவு பார்த்த விக்ராந்த் காஷ்யப் (29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ மற்றும் அரசு கட்டிடங்களின் இருப்பிடத் தகவல்கள், வீடியோக்களை இவர் சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு. ஒரு கைத்துப்பாக்கி, 7 தோட்டாக்கள், ஸ்ப்ரே பெயிண்ட், உளவுத் தகவல்கள் அடங்கிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
