காத்மாண்டு: நேபாளத்தில் அரசுக்கு எதிராக ஜென் ஸி இளையதலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதனால்,அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அதன் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் புதிய பிரதமராக பாலேந்திர ஷா சமீபத்தில் பதவியேற்றார். போராட்டத்தில் 76 பேர் உயிரிழப்புக்கு காரணமான முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்காக் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினோத் சர்மா மற்றும் சுனில் குமார் பொக்காரெல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. சர்மா ஓலி மற்றும் லேக்காக் மீதான விசாரணையை வியாழனுக்குள்(நேற்று) முடிக்க வேண்டும் அல்லது அவர்களைக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஓலி மற்றும் லேக்காக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
