இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை அமெரிக்க வௌியுறவு அமைச்சர் ரூபியோவுடன் இந்திய வௌியுறவு செயலர் மிஸ்ரி சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்க வௌியுறவு அமைச்சர் ரூபியோவை சந்தித்து பேசிய இந்திய வௌியுறவு செயலர் மிஸ்ரி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இந்திய வௌியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க துணை செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவ் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வௌியுறவுத்துறை துணை செயலாளர் அலிசன் ஹூக்கர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசிய மிஸ்ரி, இருநாடுகளின் உறவுகள் மற்றும் மேற்காசிய போர் சூழல் ஆகியவை குறித்து உரையாடினார்.

இதைத்தொடர்ந்து நேற்று வாஷிங்டன்னில் உள்ள வௌ்ளை மாளிகைக்கு சென்ற விக்ரம் மிஸ்ரி, அங்கு அமெரிக்க வௌியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆக்கப்பூர்வமான சந்திப்பின்போது, வர்த்தகம், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் குவாட் மேலாண்மை ஆகியவற்றில் அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

மார்கோ ரூபியோ, விக்ரம் மிஸ்ரி சந்திப்பு குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோர் தன் சமூக ஊடகத்தில், “மார்கோ ரூபியோ, விக்ரம் மிஸ்ரி ஆகியோரிடையே ஆக்கப்பூர்வமான, பயனுள்ள சந்திப்பு நடந்தது. முக்கியமான துறைகளில் அமெரிக்கா, இந்தியா இடையே விரிவான உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்த அமெரிக்கா விழைகிறது” என தெரிவித்துள்ளார்.

* எப்பிஐ இயக்குநர் காஷ் படேலுடன் சந்திப்பு
இந்திய வௌியறவு செயலர் விக்ரம் மிஸ்ரி வாஷிங்டன்னில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான எப்பிஐயின் இயக்குநர் காஷ் படேலை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் பதிவில், “இந்திய வௌியுறவு செயலர் மிஸ்ரி, எப்பிஐ இயக்குநர் காஷ் படேலை சந்தித்தார்.

அப்போது, பயங்கரவாதம் ஒழிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள்களை எதிர்கொள்வதில் இந்தியா, அமெரிக்கா இடையே வலுவான ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர்” என தெரிவித்துள்ளது.

Related Stories: