அமெரிக்கா: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் வெற்றியடைந்தது. விண்வெளி வீரர்கள் பயணித்த ஓரியன் விண்கலம் சரியாக 5.37க்கு பசிபிக் கடலில் இறங்கியது. 3 பாராசூட் உதவியுடன் ஓரியன் விண்கலம் பசிபிக் கடலில் இறங்கியது. நிலவை ஆராய்ந்த 4 விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்.
நாசாவின் ஆர்டெமிஸ் 2 (Artemis II) திட்டம், ஏப்ரல் 1, 2026 அன்று ஏவப்பட்ட, 50 ஆண்டுகளில் மனிதர்களை நிலவுக்கு அருகே கொண்டு சென்ற முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணமாகும். 10 நாள் பயணத்தில், ஓரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வந்து, பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகப் பசிபிக் கடலில் தரையிறங்கினர்.
அமெரிக்காவில் உள்ள தேசிய வானூர்தி விண்வெளி நிலையம் (நாசா), கடைசியாக 1972ம் ஆண்டு அப்போலோ 17 ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பியிருந்தது. அதன்பின்னர், 53 ஆண்டுகளாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஆர்டெமிஸ் -2 என்ற திட்டத்தின்கீழ் ஓரியன் விண்கலம் மூலம் 4 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுக்கு அனுப்பியது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நிலயான திட்டத்தின் (Artemis Program) ஒரு பகுதியாக, ஓரியன் விண்கலத்தின் செயல்பாடுகளைச் சோதித்தல்.ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் (முதல் கறுப்பின விண்வெளி வீரர்), கிறிஸ்டினா கோக் (முதல் பெண் விண்வெளி வீரர்) மற்றும் ஜெர்மி ஹேன்சன் (முதல் கனடிய விண்வெளி வீரர்) ஆகியோர் பயணம் செய்தனர்.
பூமியிலிருந்து புறப்பட்டு, நிலவைச் சுற்றி வந்து, சுமார் 4.,06,771 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று, அப்போலோ 13 சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.1972-க்குப் பிறகு நிலவுக்கு அருகே சென்ற முதல் மனிதப் பயணம் இதுவாகும். விண்வெளி வீரர்கள் நிலவின் பின்புறத்தைக் கண்டதுடன், பூமியிலிருந்து அதிக தொலைவு பயணித்தவர்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளனர்.
