பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வென்றார் பென்சிக்: 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் அபார வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். 3வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டீயன்ஸ் மோதினர்.

இப்போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய பென்சிக், முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அவர், 2வது செட்டையும், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: