பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ், பிரான்ஸ் வீரர் குவென்டின் ஹேலிஸ் உடன் மோதினார். முதல் இரு செட்களில் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரவ், அந்த செட்களை, 6-4, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.
3வது செட்டில் சுதாரித்து துடிப்புடன் ஆடிய ஹேலிஸ், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இருப்பினும் 4வது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரவ், அந்த செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால், 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய ஸ்வெரவ் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
