ராமேஸ்வரம், ஏப்.7: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பேக்கரும்பு கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையெடுத்து நேற்று முன்தினம் முதல்கால யாக பூஜைகள் துவங்கி, நேற்று இரண்டாம் காலபூஜைகள் நடைபெற்றன. நேற்று 108 திரவிய ஹோமம், ஷன்னவதி ஹோமம், உள்ளிட்ட யாகபூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கும்பகலசம் புறப்பாடானது.
சிவாச்சாரியர்கள் கோயில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிருஷ்ணர் மூலஸ்தானத்தில் மகா தீபாதாரனை நடந்தது.
