கோவை,ஏப்.7: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் நேசகுமார் (23). இவர், கோவை காளப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலைபார்க்கும் திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ துவங்கினர்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு நேசகுமாருக்கும், அவரது கள்ளக்காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர்.
மறுநாள் அந்த பெண் எழுந்து பார்த்த போது, நேசகுமார் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சிங்காநல்லூர் போலீசார், நேசகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
