அகமதாபாத்: ஐபிஎல் 19வது தொடரின் 9வது போட்டி, அகமதாபாத்தில் நேற்று, ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக ஆடி 70 ரன்கள் குவித்தனர். வைபவ் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 55 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின், துருவ் ஜுரெல் உடன் இணை சேர்ந்தாடிய, கேப்டன் ரியான் பராக் 8 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் 18, டொனோவன் பெரேரா 1 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசி ஓவரில், துருவ் ஜுரெல் அதிரடியாக 75 ரன் எடுத்து அவுட்டானார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. 211 ரன் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 200 ரன் எடுத்தது. கடைசி ஓவரில் 11 ரன் எடுக்க வேண்டி இருந்தது. ராஜஸ்தான் அணியில் துஷார் தேஷ்பாண்டே கடைசி ஓவரை வீசினார். முதல் 5 பந்துகளுக்கு 4 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்த அவர், ஒரு விக்கெட்டும் எடுத்தார். கடைசி ஒரு பந்துக்கு 7 ரன் தேவைப்படவே, அந்த பந்தை எதிர்கொண்ட அசோக் சர்மா ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
குஜராத்துக்கு எதிராக ராஜஸ்தான் த்ரில் வெற்றி
- ராஜஸ்தான்
- குஜராத்
- அகமதாபாத்
- ஐபிஎல் 19 வது தொடர்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- குஜராத் டைட்டன்ஸ்
- யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
- வைபாவ் சூர்யவன்ஷி
- ஆடி
