தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 94 பேர் வேட்பு மனு

தூத்துக்குடி, ஏப்.5: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இதுவரை மொத்தம் 94 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 55 பேர் மனு தாக்கல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த தொகுதி தலைநகரங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுதாக்கல் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு நாட்கள் நடைபெற்ற வேட்பு மனுதாக்கலில் 39 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் 3ம் நாளான நேற்று விளாத்திகுளம் தொகுதியில் 13 மனுக்களும், தூத்துக்குடியில் 12 மனுக்களும், திருச்செந்தூரில் 11 மனுக்களும், ஓட்டப்பிடாரத்தில் 9 மனுக்களும், கோவில்பட்டியில் 8 மனுக்களும், வைகுண்டத்தில் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 55 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மொத்தம் 94 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் வேட்பு மனுதாக்கல் நடைபெறாது. நாளை (திங்கள்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். அன்று ேமலும் பலர் வேட்பு மனு தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: