மதுரை, ஏப். 6: ேகாடை காலங்களில் ஆடு, மாடுகள் மேய்ச்சலின் போது ஏற்படும் நாவறட்சி தடுப்பது குறித்து கால்நடை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: கோடை காலங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மற்றும் மாடுகளுக்கு நா வறட்சி ஏற்படும். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் புல்லை மேய்வதை தவிர்த்து நிழலை தேடி சென்று இளைப்பாறும். அப்போது அவற்றிற்கு நா வறட்சி ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். இதற்கு கோடை காலங்களில் மூலிகை தண்ணீரை தயாரித்து கால்நடைகளுக்கு வழங்கலாம்.
குறிப்பாக தினசரி இரு முறை வழங்கும் தண்ணீரை, கூடுதலாக இரு முறையாக வழங்கலாம். குளிர்ந்த தண்ணீர் சிறிய ரக நெல்லிக்காய் இடித்த தண்ணீர், வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் என உள்ளிட்ட தண்ணீரை வழங்கலாம்.
இதில் முக்கியமாக கவனிக்க ேவண்டியது ஒவ்வொரு முறையும் தண்ணீர் கொடுக்கும் போது, புதிய தண்ணீராக தான் கொடுக்க ேவண்டும். பழைய தண்ணீரை வழங்கினால் அதன்மூலம் கோடை காலங்களில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
