ராஜபாளையம், ஏப். 6: ராஜபாளையம் தர்மராஜா பெரியதெருவை சேர்ந்தவர் மூக்கையா(42). இவர் சம்பவத்தன்று தென்காசி சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மேல ஆவரவம்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (37) என்பவர் மது போதையில் மூக்கையாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்அங்கிருந்து வெளியேற முயன்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த ரஞ்சித்குமார், அவரது தலையில் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூக்கையாவை அங்கிருந்தோர் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் ே பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எஸ்ஐ ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து, ரஞ்சித்குமாரை கைது செய்தார்.
