வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி

 

பெருந்துறை, ஏப்.6: பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவரது மனைவி லதாமணி (35).கடந்த 2ம் தேதி இவர்களுடைய குழந்தையான விகாஸ் (5) என்ற சிறுவனை சீனிவாசன் பெருந்துறை அருகே திருவாச்சி பூவம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில்,நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் சிறுவன் விகாஸ் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது.‌ பின்னர் இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சிறுவன் விகாசின் உடலை தேடினார்கள். அப்போது இருட்டு ஆகிவிட்டதால் தேட முடியவில்லை.‌ இதனால் நேற்று மீண்டும் விகாசின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது வெள்ளோடு புங்கம்பாடி அருகே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து சிறுவன் விகாசின் உடல் மீட்கப்பட்டது.‌ இது குறித்து விகாசின் தாய் லதாமணி கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.‌

Related Stories: