திருப்பரங்குன்றம், ஏப். 6: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி நேற்று விரகனூர், சிலைமான், புளியங்குளம், கல்லம்பல், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், விராதனூர், நெடுங்குளம், குசவன்குண்டு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். உடன் ஒன்றிய செயலாளர்கள் வேட்டையன், தனபால் மற்றும் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கிருத்திகா தங்கப்பாண்டியன் பேசியதாவது:
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளோடு சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் நமது முதல்வர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் எந்தவொரு திட்டங்களும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கொண்டு வரவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இவ்வாறு பேசினார். முன்னதாக வேட்பாளருக்கு சிலைமான் பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
