வத்திராயிருப்பு, ஏப்.6:தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நடந்தது. வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி ஊராட்சியில் இருந்து வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் வரை முதல் தலைமுறை ஓட்டு போடும் வயது வந்துள்ள வாக்காளர்கள், பொதுமக்கள் எனது ஓட்டு எனது உரிமை எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாட்டு வண்டி மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியானது தம்பிபட்டியில் தொடங்கி மகாராஜபுரம் வழியாக வந்து வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் நிறைவுற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
