100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி

ஈரோடு,ஏப்.3: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள்,வணிகர்கள்,தொழிலாளர்கள்,தொழில் நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மருத்துவக்கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, ‘வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை’ என்ற வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்பின், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

Related Stories: