ஈரோடு, மார்ச் 31: ஈரோட்டில் கள்ளக்காதலி மகளை கர்ப்பமாக்கிய தறிபட்டறை தொழிலாளி மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (38). தறி பட்டறை தொழிலாளி. திருமணம் ஆனவர். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தறி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இங்கு, கணவனை பிரிந்து 2 மகள்களுடன் வேலை செய்யும் பெண்ணுடன், சுரேஷ்குமாருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கத்தினால் அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சுரேஷ்குமார் சென்று வந்துள்ளார். அந்த பெண்ணின் 14 வயது மகளுடன் சுரேஷ்குமார் நெருக்கமாக பழகியுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளார். அப்போது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தினர். இதுகுறித்து சிறுமியின் அம்மா ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் சுரேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
