ஈரோடு, ஏப். 2: ஈரோடு மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு நேற்று முதல் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் முழு ஆண்டு தேர்வு தொடங்கியது.
இதில், தமிழ் பாடத்துக்கான முதல் தேர்வு 6ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கு நேற்று காலையும், 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கு மதியமும் நடந்தது. 16ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நிறைவடைந்து, கோடை விடுமுறை விடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
