வேடசந்தூரில் இருந்து கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி

 

கொடுமுடி, மார்ச் 29: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடி மணல்மேடு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக நேற்று வந்தனர். அவர்களுடன் வேடசந்தூர் கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (17), தாயார் முருகேஸ்வரி மற்றும் சகோதரர் உதயகுமாருடன் கொடுமுடி வந்தார். தீர்த்தம் எடுக்க வந்தவர்கள் குளிப்பதற்கு காவிரி ஆற்ற்றுக்குள் இறங்கினர்.

கோகுலகிருஷ்ணனும் காவிரி ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்தார். அப்போது திடீரென நீரில் மூழ்கினார். கோகுலகிருஷ்ணன் நீரில் மூழ்குவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். ஆனால், அவர் நீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மாயமானவரை தேடினர். நீண்ட நேரத்திற்கு பின் கோகுலகிருஷ்ணனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Related Stories: