சட்டமன்ற தேர்தலையொட்டி சட்டவிரோத மதுவிற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம்

பெரம்பலூர், ஏப். 3: சட்டவிரோத மது விற்பனை தொடர்பான தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றுஅவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் -23ம்தேதி நடைபெற உள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மதுபான விற்பனையினை கண்காணித்திடவும்,

சட்ட விரோதமான மதுபான விற்பனையை தடுத்திடவும் மற்றும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான புகார்களை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மண்டல அளவில் பறக்கும்படை அலுவலராக டெபுட்டி கலெக்டர் ஸ்ரீராம் மற்றும் மாவட்ட அளவில் தாசில்தார் மாலதி ஆகியோரும், மேலும் மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலராக தாசில்தார் மாயகிருஷ்ணன் என்பவரும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் சட்ட விரோத மது விற்பனை தொடர்பான தங்கள் புகார்களை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் தேர்தல் மற்றும் 04328 225702, 04328 225703, 04328 225704, 04328 225706, Toll Free எண் 18005994402 ஆகிய தொலைப் பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்ன மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: