சென்னிமலை பகுதியில் ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு சென்ற வாகனம் சோதனை

 

சென்னிமலை,மார்ச் 24: சென்னிமலை அருகே ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னிமலை அருகே ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையில் காங்கயம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகனாம்பாள் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னிமலை அருகே தோப்புக்காடு பகுதியில் சாலையில் சென்ற கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வழியாக வங்கி ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு சென்ற வாகனத்தையும் தடுத்து அதில் உள்ள பணத்திற்கான ஆவணங்களை சரிபார்த்தனர்.

Related Stories: