திமுக அறிவித்த ரூ.8000 கூப்பனுக்கு வரவேற்பு; ஆஃபர்களை அள்ளி வீசும் வீட்டு உபயோக பொருள் விற்பனை உரிமையாளர்கள்: விளம்பர வீடியோ வைரல்

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் ‘ஹீரோயின்’ ஆக ஜொலிக்கும் ‘இல்லத்தரசி’ கூப்பன் திட்டம், இப்போது தமிழகத் தேர்தல் களத்தின் ஹாட் டாபிக் என்றே சொல்லலாம். ரேஷன் கார்டு வைத்திருக்கும், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் பெண் தலைவிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை நீங்களே வாங்கிக் கொள்ளலாம். பணமாகக் கொடுத்தால் அதை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் கூப்பனாகக் கொடுத்தால், அது வீட்டு தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே பயன்படும் என்பது தான் இந்த அறிவிப்பின் நோக்கம். இந்த அறிவிப்பின் படி, தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த கூப்பனை கொடுத்து தனியார் டீலர்களிடம் வாங்கலாம். இந்த கூப்பன்களைப் பயன்படுத்தி தமிழகத்தின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் டீலர்ஷிப்களில் பொருட்களை வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இந்த கூப்பனைப் பணத்திற்குப் பதில் கொடுத்து, மக்களுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி அல்லது இண்டக்ஷன் ஸ்டவ் போன்றவற்றை தள்ளுபடி விலையில் அல்லது முழுமையாக வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் இந்த கூப்பனை அரசிடம் கொடுத்து ரீபண்ட் பெற்றுக் கொள்வார்கள். இதுதான் இந்த அறிவிப்பின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அறிவிப்புக்கு எண்ணெய் ஊற்றும் விதமாக தற்போது, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தங்கள் கடைகளில் பர்செஸ் செய்யும் வகையில் ரூ.8000க்கான ஆஃபர்களை அள்ளி வீசத் தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அதில், ‘ரூ.8000 கூப்பன் கொடுக்க போறார் … முதல்வர் சொன்னா செய்வார்..

கடையில் போய் என்ன இருக்கு போய் பாத்துட்டு வாங்க’..என்று சொல்லும் இல்லத்தரசிகளுக்காக தான் இந்த ஆஃபராம். முதல்வர் தரக்கூடிய ரூ.8000 கூப்பனால நேரடியாக கடைக்கே போய் நமதுக்கு தேவையானத வாங்கலாம். அதற்காக தான் இந்த காம்போ ஆஃபர் கொடுத்திருக்கிறோம் என்கிறார்கள் கடை உரிமையாளர்கள். பழைய பிரிட்ஜ்களை கொடுத்து புதுசு கொண்டு செல்வதற்கும் ஆஃபர் கொடுப்பதை பற்றி யோசிச்சிட்டு இருக்கோம்.

கூப்பனோட வாங்க.. பொருட்களை அள்ளி செல்லுங்கள் அதுக்கு திமுகவுக்கு வாக்களிங்க என்பதுதான் கடை உரிமையாளர்களின் விளம்பரமாக இருக்கிறது. மீண்டும் ஆட்சி அமைக்கும் போது உள்ளூர் ஏஜென்சிகளுக்கு வியாபாரம் பெருகும் என்ற நம்பிக்கையோடு சொல்கிறார்கள். எனவே, இல்லத்தரசி கூப்பன் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories: