அதிமுக போர்வையில நுழைய முயற்சிக்குறாங்க… தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று மீண்டும் நிரூபிக்க போகும் தேர்தல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணி ஆகியோரை ஆதரித்து தமிழக துணைமுதல்வரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று நாட்றம்பள்ளி பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நம்மை எதிர்த்து நிற்கிற அணி யாரு? தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என பார்க்க வேண்டும். டெல்லி அணியில் மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருக்கிறாங்க.

பாஜவுக்கு தெரியும், எப்படி வந்தாலும் தமிழ்நாட்டில் நம்மை விட மாட்டார்கள் என்று. அதற்காகத்தான் அதிமுகவை உடன் அழைத்துக்கொண்டு ஒரே போர்வையாக தமிழ்நாட்டுக்குள் வருகிறார்கள். தமிழ்நாட்டில் என்றும் பாஜ போன்ற பாசிச சங்கி கூட்டத்திற்கு அனுமதி கிடையாது. எனவே, மீண்டும் வெற்றி பெறப்போவது திமுக தான். டெல்லிக்கு சொல்லுவோம், தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். அதனை மீண்டும் நிரூபிக்க போகும் ேதர்தல்தான் வரும் சட்டமன்ற தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.

வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நேற்று திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் எஸ்.எஸ்.பி. சையத் பாருக் பாஷாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், `சிறுபான்மை மக்களுக்கு காவலராக இருக்கும் ஒரு இயக்கம் திராவிட இயக்கம். அதிமுக கட்சி பாஜ உடன் சேர்ந்து சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வகையில் துரோகம் செய்து வருகிறது.

2019ல் ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மைகளுக்கு எதிராக என்.ஆர்.சி, சி.ஏ.ஏ சட்டம் கொண்டு வந்தது. அப்போது அதிமுக அந்த சட்டத்தை ஆதரித்தது. நான் அந்த சட்டத்தின் நகலை கிழித்ததால் கைது செய்யப்பட்டு முதல் முறையாக சிறைக்கு சென்றேன். திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் செய்து கொடுத்துள்ளோம்.’ என்றார். தொடர்ந்து ஆம்பூர், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், வேலூர் மற்றும் காட்பாடி அருகே திருவலம் ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தனர்.

Related Stories: