மோடி வருகை டிரோன் பறக்க தடை

சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி சென்னைக்கு நாளை மற்றும் 4ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் “சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளைத் தவிர நாளை மற்றும் 4ம் தேதி ஆகிய 2 நாட்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் டிரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர் கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னையில் பறக்கவிட மே 22ம் தேதி வரை தடைசெய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: