ஓய்வு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

சேந்தமங்கலம், ஏப்.2: எருமப்பட்டி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஓய்வு பெற்ற பத்திர பதிவாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எருமப்பட்டி அடுத்த பவித்திரம் சோதனை சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார், அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாமக்கல் ஆண்டவர் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற பத்திர பதிவாளரான விஜயராஜ் (64), தனது காரில் கோயிலுக்கு சென்று விட்டு நாமக்கல் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனையிட்டபோது ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: