போலி பாஸ்போர்ட் முதியவர் கைது

திருச்சி, மார்ச் 25: போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்று திரும்பியவர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மார்ச்.23ம் தேதி விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அம்பால்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (58) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் போலி ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் சென்று வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு சுப்பிரமணியனை கைது செய்தனர்.

 

Related Stories: