மாநகர போலீசார் தரப்பில் தேர்தல் விழிப்புணர்வுக்கான இரு சக்கர வாகன பேரணி

 

மதுரை, மார்ச் 29: மதுரை மாநகர காவல்துறை சார்பில், தேர்தல் விழிப்புணர்வுக்கான இருசக்கர வாகன பேரணி மதுரையில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்.23ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில், 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி, அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பான மற்றும் நியாயமான தேர்தல் சூழலை உறுதி செய்ய வேண்டும். இதன் பொருட்டு வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன்.

100 சதவீதம் அச்ச உணர்வு இல்லாமல் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்வதுடன், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாநகர காவல் துறை சார்பாக மதுரையில் நேற்று இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த பேரணிக்கு முன்பாக, தேர்தல் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். மேலும் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா, காவலர் அழைப்பில் வாக்கு எழுச்சி ஆகிய தலைப்பின் கீழ் நடைபெற்ற பேரணியை, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, துணை கமிஷனர்கள் இனிகோ திவ்யன், மதிவாணன், திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணியில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

 

Related Stories: