சிவகங்கை, மார்ச் 29: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சிவகங்கை மாவட்டத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பறக்கும் படையினர், போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. ரூ.50ஆயிரம் மட்டுமே ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பணத்திற்கான ஆவணங்கள் இருந்தால் அவை திரும்ப ஒப்படைக்கப்படும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணத்தில் அரசியல் கட்சியினரிடம் இருந்து வெறும் 10 சதவீதம் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. இவையனைத்தும் வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவையாகும். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மளிகை, அரிசி, காய்கறிகள், இரும்பு பொருட்கள், ஸ்டேசனரி, பூ, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் நடத்துபவர்கள் மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலேயே பொருட்கள் கொள்முதல் செய்கின்றனர்.
கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான பணத்தை வியாபாரிகளில் பெரும்பாலானோர் நேரடியாக கொண்டு செல்கின்றனர். வங்கி மூலம் பரிமாற்றம் செய்வது கிடையாது. இந்நிலையில் தொடர் பணம் பறிமுதலால் பொருட்கள் கொள்முதலை குறைத்து விட்டனர். தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தற்போது சிறிய அளவிலேயே கொள்முதல் செய்து வருகின்றனர். வியாபாரிகள் கூறியதாவது, பணத்தை பறிமுதல் செய்து கொண்டு ஏதேனும் ஆவணம் கொண்டு வந்தால் மட்டுமே மீண்டும் வழங்
