நாகப்பட்டினம், மார்ச் 29:நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் என 3 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி நிலவரப்படி 5 லட்சத்து 67 ஆயிரத்து 730 பேர் வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்த பணிகள் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் கண்டறிய இயலாத, நிரந்தரமாக குடி பெயர்ந்த, இறந்த மற்றும் இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் 39 ஆயிரத்து 783 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் 84 ஆயிரத்து 493 ஆண்களும், 88 ஆயிரத்து 464 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் 83 ஆயிரத்து 392 ஆண்களும், 85 ஆயிரத்து 535 பெண்களும், 7 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 934 வாக்காளர்கள் உள்ளனர். வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் 91 ஆயிரத்து 735 ஆண்களும், 94 ஆயிரத்து 299 பெண்களும் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 34 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 620 ஆண்களும், 2 லட்சத்து 68 ஆயிரத்து 298 பெண்களும், 29 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொ த்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 47 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 8 ஆயிரத்து 678 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
