நாங்குநேரியில் காரில் கொண்டுவரப்பட்ட கப்பல் கருவிகள் பறிமுதல்

களக்காடு, மார்ச்29: தேர்தல் பறக்கும் படையினர் நாங்குநேரி சுங்க சாவடி அருகே நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த டோனியம் ஜுசன் என்பவர் வந்த காரில் மீன் பிடிக்க படகில் பயன்படுத்தப்படும் காந்த திசைகாட்டும் கருவிகள் 10 மற்றும் மூன்று எல்இடி விளக்குகள் ஆகியவை காரில் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது. எனவே அவற்றை பறிமுதல் செய்து நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அதற்கான ரசீகள் இருப்பதை கண்டு அவற்றை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற சென்றதாகவும் மாலை வரை பொருட்களை மீட்க சம்பந்தப்பட்டவர் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: