வாகன சோதனையில் ரூ.2.73 லட்சம் பறிமுதல்

சிவகிரி,மார்ச் 29: வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் ஏவிகே பள்ளி அருகில் நேற்று பணி மேற்பார்வையாளர் பால்சாமி, போலீசார் இசக்கிமுத்து ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் சங்கரன்கோவில் ஸ்டீல் கம்பெனி மேனேஜர் காளி முருகன் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 840ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று வாடிகோட்டை விலக்கு பகுதியில் சயுபில்லா தலைமையில் போலீசார் தனசேகர், ராஜசேகர் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மீன் வாங்குவதற்காக காரில் சென்ற பாலக்காட்டை சேர்ந்த அப்துல் அசிஸ் மகன் சுல்தான் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 840 பணத்தை சிவகிரி தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி கணேசிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Related Stories: