மொடக்குறிச்சி மார்ச் 24: மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட எழுமாத்தூரில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சியை மொடக்குறிச்சி தாசில்தார் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்த மனித சங்கிலி பேரணி நிகழ்ச்சியை மொடக்குறிச்சி தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் இதில் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் ஆர்.ஐ.க்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
