ஈரோடு, மார்ச் 23: ஈரோட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று (23ம் தேதி) நடைபெற இருந்த இருசக்கர வாகனங்கள் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பில் பொதுவிநியோக திட்ட அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரால் இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்கள் ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுலவத்தில் இன்று (23ம் தேதி) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக, வாகன ஏலம் ரத்து செய்யப்படுகிறது. ஏலம் நடைபெறுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
