இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பவானி: சித்தோட்டை அடுத்த ஆர்என்புதூர் ஜவுளி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி தன்சிகா (25). இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால், தன்ஷிகா ரவிசந்திரனை பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ரவிச்சந்திரன் காலிங்கராயன்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தன்சிகா, மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 7 வருடங்களே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: