ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு காற்றில் பறக்கும் தூசியால் அவதி

 

ஈரோடு, மார்ச் 23: ஈரோடு பெரியார் நகரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தன.
இக்குடியிருப்புகள் பயன்படுத்த தகுதியற்றவை என சான்றிதழ் பெறப்பட்டன. எனவே இங்கிருந்த குடியிருப்புவாசிகளுக்கு தேவையான கால அவகாசம் வழங்கி அனைத்து குடியிருப்புவாசிகளும் வெளியேற்றப்பட்டனர்.
குடியிருப்புகள் கடந்த சில மாதங்களாக காலியாகவே இருந்தன. கடந்த இரு தினங்களாக அடுக்குமாடி குடியிருப்பு ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் இடித்து அகற்றப்படும் குடியிருப்பில் இருந்து கற்கள் பொதுமக்கள் மீது விழுந்து விடாமல் இருக்க இரும்பு கம்பி வலை போடப்பட்டுள்ளது.
ஆனால், கட்டடம் இடித்து அகற்றப்படும் போது கிளம்பும் தூசிகள் காற்றில் பரவி குடியிருப்புவாசிகளை மூச்சு திணற செய்து வருகிறது. காற்றில் பரவும் தூசியால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கடந்த இரு தினங்களாக பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

Related Stories: