தமிழக அரசு அமைந்தபின், சூழலியல், நீர்நிலை, பறவைகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் குழுவினர் இணைந்து, மாவட்டத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க தகுதி வாய்ந்த பகுதிகள் குறித்த, கருத்துருக்களை அரசுக்கு அனுப்பினர்.
அதில், குறிப்பாக மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவுக்குட்பட்ட மதுரை மாவட்டத்தில், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள உள்ள ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்ட 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க வேண்டுமென, மாவட்டத்திலுள்ள சூழலியல் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் விரிவான கருத்துரு மாவட்ட வனத்துறை வாயிலாக அரசுக்கு அனுப்பப்பட்டது.
