கல்லூரி மாணவர்கள் பேரணி 100 சதவீதம் வாக்களிப்போம்

காரியாபட்டி, மார்ச் 28: காரியாபட்டியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். காரியாபட்டி வருவாய் துறை சார்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி காரியாபட்டி நகரின் முக்கிய வழிகளில் சென்று ஐயப்பன் கோயில் வரை சென்றடைந்தது. பேரணியில் கல்லூரி மாணவர்கள் 100% வாக்களிப்போம் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்போம் என்று கோஷங்கள் எழுப்பியபடி பங்கேற்றனர். பேரணியில் வருவாய் துறையினர் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: