பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

சின்னமனூர், மார்ச் 28: சின்னமனூரில் கழிவுநீர் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு, சின்னமனூர் உத்தமபாளையம் சாலையில் உள்ள வேம்படிகளம் பகுதியில் கடக்கும் முல்லைப் பெரியாற்றுக்குள் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சின்னமனூர் முத்தாலம்மன் கோயில் அரசு மருத்துவமனை சாலையிலும், சின்னமனூர் செக்காமுக்கிலிருந்து வஉசி நகர் சாலையும் இணையும் பகுதியில் ஏற்கனவே கழிவுநீர் கடந்து செல்லும் வகையில் வாறுகால் மீது பாலம் கட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளடைவில் சாலை உயர்ந்ததாலும், மேலும் வாறுகாலில் மண், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் தேங்கி கழிவுநீர் கடக்க வழி இன்றியும், துர்நாற்றம் வீசியது. இதனால் சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் தரை மட்ட பாலத்தை உயர்த்தி கழிவுநீர் கடந்து செல்லும் வகையில் அகன்ற வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று நகராட்சி நிர்வாகம் சார்வில், நான்கு பிரிவு சாலையில் உள்ள வாறுகால் தூர்வாரப்பட்டு, கழிவு நீர் எளிதாக கடந்துசெல்லும் வகையில் தரைப்பாலத்தை உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

Related Stories: