மாவட்ட ஹாக்கி அணி வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது

தேனி, மார்ச் 28: தேனி மாவட்ட ஹாக்கி அணி வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்க உள்ளது. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் ஏப்ரல் 11ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை மாவட்டங்களுக்கிடையேயான பெண்களுக்கான ஜூனியர் ஹாக்கி போட்டிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ள தேனி மாவட்ட அணிக்கான தேர்வு நாளை (மார்ச் 29) பிற்பகல் 2 மணியளவில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.

இத்தேர்வில் கலந்து கொள்ள உள்ள வீராங்கனைகள் 1-1-2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்த, தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வரும்போது, பிறப்புச் சான்றிதழ், அல்லது மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும். இத்தேர்விற்காக ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அட்ஹாக் கமிட்டியின் சார்பில் செல்வம், கார்த்திகைராஜ், தீபக் இந்திராபோஸ், முத்துக்கிருஷ்ணன், நித்தன்பாலாஜி, கோகிலா, கோபி ஆகியோர் கொண்ட குழு இத்தேர்வுக்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

எனவே, ஹாக்கி வீராங்கனைகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். விபரங்களுக்கு 8838408344 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அட்ஹாக் கமிட்டி தெரிவித்துள்ளது.

 

Related Stories: