சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை

ஜெயங்கொண்டம், மார்ச் 28: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தல், தேர்தல் செலவினங்கள், வாகன அனுமதி பெறுதல் ஆகியவை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலரும் உடையார்பாளையம் கோட்டாட்சியருமான மனோகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேற்படி ஆலோசனை கூட்டத்தில் 2026 மார்ச் 30 ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 6 ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள், அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்தும், இணையவழியில் வாகனம் மற்றும் இதர இனங்கள் அனுமதி பெறுதல் குறித்தும், தேர்தல் செலவினங்கள் குறித்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தவேல் , தாசில்தார்கள் ஆண்டிமடம் சுசிலா, செல்வகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: