சீர்காழி கோதண்டராம சுவாமி கோயிலில் கருட சேவை

சீர்காழி, மார்ச் 28: சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் கருட சேவையையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோயிலில் ஸ்ரீ நவமி உற்சவத்தை முன்னிட்டு நடந்த கருட சேவை உற்சவத்தில் கோதண்டராமசுவாமி கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோதண்டராம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

 

Related Stories: