மருதூர் வரதாஹினி மடத்தில் ராம நவமி உற்சவம்

செம்பனார்கோயில், மார்ச் 28: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கருவாழக்கரை மருதூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ராம வரதாஹினி மடம் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளி அருள்பாலித்து வரும் ராமச்சந்திர மூர்த்திக்கு ராம நவமியை முன்னிட்டு மஞ்சள்பொடி, மாப்பொடி, பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சாம்பசிவம், கேசவன், கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 

Related Stories: